உலகளவில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் இலங்கை 95 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியையும் வழங்குகிறது.

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் ஆஸ்தீரியா, டென்மார்க், பின்லாந்து, அயர்லாந்து, லக்ஸம்பேர்க், நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

By slaid

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *